×

சினிமாவில் இருக்கும் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார்: இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம்!

சென்னை: சினிமாவில் இருக்கும் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் புகழாரம் சூட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து அவரது உடலுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது; “”சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகனாக வாழ்ந்த ஒரு தலைவரை இழந்துவிட்டோம். பலருக்கு ஒரு நல்ல தலைவனாகவும், உத்வேகமாகவும் விஜயகாந்த் இருந்துள்ளார். சினமதுரையில் உள்ள எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்திலும் கலந்துள்ளார்.

விஜயகாந்தின் இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. இந்த நேரத்தில் அவரின் ஆசை, விருப்பம் அதை அனைவரும் நிறைவேற்றுவோம்” என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

விஜயகாந்த் உடலுக்கு வெற்றிமாறன், நடிகர் ராமராஜன், நடிகர் வாகை சந்திரசேகர், சின்னத்திரை நடிகர்கள் பாலா, அமுதவாணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். “விஜயகாந்த் அவர்கள் உன்னதமான மனிதர். எனது வாழ்நாளில் முதன்முதலாக நான் பார்த்த பிரபலம் அவர்தான். அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதியில்லை.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவரிடம் கற்றுக் கொள்ளலாம்” என நடிகர் பாலா தெரிவித்துள்ளார். ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு என விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் வாகை சந்திரசேகர் உருக்கமாக தெரிவித்தார்.

The post சினிமாவில் இருக்கும் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார்: இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம்! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Vetermaran ,Chennai ,Vethimaran ,DMUDika ,Vetrimaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...